என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாம்பு கடித்து வியாபாரி பலி
நீங்கள் தேடியது "பாம்பு கடித்து வியாபாரி பலி"
திருவெண்ணை நல்லூர் அருகே தண்ணீர் பாய்ச்சுவதற்க்காக வயலுக்கு சென்ற வியாபாரியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெண்ணை நல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீழ் தணியாளம் பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(வயது46) இவர் கெடிலம் பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவர் கீழ்தணியாளம் பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நெல்லும் பயிரிட்டுள்ளார்.
நேற்று இரவு பாலாஜி வழக்கம் போல் அரிசிக்கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்க்காக வயலுக்கு சென்றார். அங்கிருந்த மோட்டார் கொட்டகையை திறந்து பாலாஜி உள்ளே சென்றார். அப்போது பாலாஜியை பாம்பு கடித்தது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது . பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திரு வெண்ணை நல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X